நான்கு அரசிகள் ஆச்சேயை ஆண்டிருக்கின்றனர்; அஸிசாவும் ஆளலாம்!

 

7 ngos support Azizaநான்கு அரசிகள் ஆச்சேயை ஆண்டிருக்கின்றனர் என்ற அடிப்படையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக  நியமிக்கப்பட வேண்டும் என்று ஏழு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் கூறின.

அந்த ஏழு அமைப்புகளின் சார்பில் பேசிய செஸ்மேக்ஸ் இயக்குனர் முகமட் நூர் மானுடி ஆச்சே இஸ்லாமிய அரசாங்கத்தை நான்கு அரசிகள் ஒருவர் பின் ஒருவராக 1641 க்கும் 1689 க்குமிடையில் ஆண்டுள்ளனர் என்று கூறினார்.

அரசி சோபியாதுடின் (1641-1675), அரசி நாகியாதுடின் (1675-1678); அரசி ஸாக்கியாதுடின் (1678-1688) மற்றும் அரசி கமலாட் சியா (1688-1689) ஆகியோரே அந்த நால்வரும்.

“இந்த நான்கு பெண் ஆட்சியாளர்கள் 59 ஆண்டுகளுக்கு ஆச்சேயை ஆண்டுள்ளனர். அவர்கள் நியாயமாக ஆட்சி செய்ததோடு மக்களின் நலன்களுக்கு ஆனவற்றை செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது”, என்று அவர் இன்று ஷா அலாமில் செய்தியாளர்களிடம் கூறினார்.