தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி

 

Lawyers to marchதேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் திடீரென்று அதிகரித்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மலேசிய வழக்குரைஞர் மன்றம் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இன்று விஸ்மா எம்சிஎயில் நடந்த அந்த அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வழக்குரைஞர் நியு சின் இயு முன்மொழிந்தது 120 இதர வழக்குரைஞர்கள் வழிமொழிந்த அத்தீர்மானம் விவாதிக்கப்பட்டது.

அந்த தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஒரு சட்டப் பேராசிரியர் உட்பட பலர் திடீர் திடீர் என்று கைது செய்யப்பட்டு தேச நிந்தனைக் கருத்துகளை கூறினர் என்று குற்றம் சாட்டப்பட்டது இந்த தீர்மானத்திற்கு இட்டுச் சென்றது.

எட்மண்ட் போன் அளித்த தகவலின்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 701 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

Lawyers to march1இதற்கு முன்பு மலேசிய வழக்குரைஞர் மன்றம் போலீசாரின் தவறான செயல்கள் மற்றும் அமைதியாக ஒருங்கு கூடுதல் மசோதா 2011 ஆகியவற்றுக்கு எதிராக பேரணிகளை நடத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட “நீதிக்கான நடை” பேரணியில் 2,000 வழக்குரைஞர்கள் புத்ரஜெயாவிலுள்ள பிரதமர்துறை இலாகாவை நோக்கி 3.5 கிலோமீட்டர் நடந்து சென்று நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை நிறுத்துவதற்கு ஓர் அரசு ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.