இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் – ஐ

iiiஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன சாதனையை நிகழ்த்துமோ தெரியாது…ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. என்ன சாதனை? பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம்.

அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம் முழுக்க வெளியாகின்றன. அப்பேற்பட்ட பாலிவுட் படங்களின் பட்ஜெட்டையே தென்னிந்திய திரைப்படங்களின் பட்ஜெட் பின்னுக்குத் தள்ளிவிட்டன. குறிப்பாக தமிழ்ப்படங்களின் பட்ஜெட் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை தாண்டிவிட்டன.

இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படம் என்ற பெருமை ஐ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஐ திரைப்படத்தின் பட்ஜெட் 185 கோடி ரூபாய். ஐ படத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபாலி தெலுங்குப்படத்தின் பட்ஜெட்.

இதன் பட்ஜெட் 175 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ளது கோச்சடையான் படம். இப்படத்தின் பட்ஜெட் – 150 கோடி. இப்படங்களுக்கு அடுத்த இடங்களை பிடித்திருப்பது..மூன்று ஹிந்திப்படங்கள். ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பட்ஜெட் 130 கோடி. மற்றவை தூம் 3 மற்றும் கிரிஷ் -3. தூம் 3 படத்தின் பட்ஜெட் -125 கோடி. க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் -115 கோடி.