யுத்தம் இடம்பெற்ற வேளையில் சர்வதேசம் தலையிட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்!

american-flag-2aதேவையான சந்தர்ப்பத்தில் சர்வதேச தலையீடு இடம்பெறுமாயின் இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை, ருவன்டாவ, சிரியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் அவதானம் தாமதமாகவே செலுத்தப்பட்டதால் பல உயிர்கள் பறிக்கப்பட்டதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் போதே அமெரிக்க பிரதிநிதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் சர்வதேச சமூகத்தின் அவதானம் தாமதமாகவே செலுத்தப்பட்டதால் மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

TAGS: