ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்

ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்

பலமான, ஐக்கிய ஸ்காட்லாந்தை மேம்படுத்த முரண் நிலையில் இருந்து இணக்க நிலைக்கு அரசியல் கட்சிகள் யாவும் நகர வேண்டும் என்று கோரும் ஒரு கவர்ச்சிகரமான உரையை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்துக்கு முழு சுதந்திரம் பெறுவதை பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள் நிராகரித்ததை அடுத்து, உலகின் கண்கள் தற்போது பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் மீது திரும்பியுள்ளதாக பிரவுண் அவர்கள் கூறியுள்ளார்.

மூன்று பெரிய தேசியக் கட்சிகளின் தலைவர்களும் ஸ்காட்லாந்துக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இதனுடன் சேர்த்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கும் அரசியல் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கமரென் கூறியுள்ளார்.

அதேவேளை, ஏனைய தேசங்கள் ஸ்காட்லாந்தில் இருந்து பிறிதாக, மெதுவாக கையாளப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. -BBC