ஆளுவதற்கான இறுதி அதிகாரம் படைத்தவர் யார், மக்களா அல்லது மன்னரா?

-கிம் குவேக், செப்டெம்பர் 21, 2014

PKR Deputy Azmin Aliசிலாங்கூர் மந்திரி புசார் பதவி. அஸ்மின் அலி கட்சிக்கு விசுவாசமானவர் என்றால், மந்திரி புசார் பதவி வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அவர் அறிவிக்க வேண்டும்.

அதைத்தான் அவரது சகாவான நிக் நாஸ்மி அஹமட் செய்துள்ளார். சுல்தானின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வான் அஸிசாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது பெயரை முன்மொழிய பாஸ் தெரிவித்தாக கூறப்படும் ஆலோசனையை அவர் உடனடியாகவும் மரியாதையுடனும் மறுத்து விட்டார்.

விசுவாசம் என்ற பிரச்சனை ஒருபுறமிருக்க, இங்கு ஆபத்தில் இருப்பது ஜனநாயத்தின் மிக முக்கிய கோட்பாடு. மாநில அரசை வழிநடத்த ஆளுங்கூட்டணி தேர்வு செய்திருக்கும் அதன் தலைவரின் நியமனத்தை சுல்தான் தமது அதிகாரத்தைக் கொண்டு நிராகரிப்பது பொறுத்தமானதா?

ஆம் என்றால், ஆளும் கூட்டணி எடுத்துள்ள மிக முக்கியமானது என்று கருதப்படும் அரசியல் தீர்மானத்தை தடுத்தாளும் அதிகாரம் சுல்தானுக்கு உண்டு என்று அர்த்தமாகாதா? அப்படி என்றால், சுல்தான் செயலாட்சி அதிகாரம் கொண்டுள்ளார் என்பதோடு அரசியல் கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்றாகாதா?

ஒரு மன்னரின் அவ்வாறான அரசியல் ஈடுபாடு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி கோட்பாட்டிற்கு எதிரான முதன்மையான மீறல் என்று கருதப்படாதா?

சுருக்கமாக கூறினால், ஆள்வதற்கான இறுதி அதிகாரம் யாரிடம் இருக்கிறது: மக்களிடமா அல்லது மன்னரிடமா?