அஸ்மின் அலி மந்திரி புசாராக நியமிக்கப்படலாம்

Azmin Ali for mbபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.

பதவி சத்தியப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 க்கு கிள்ளான், இஸ்தானா அலம் ஷாவில் நடைபெறும்.

பதவி ஏற்ற பின்னர் அஸ்மின் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

மந்திரி புசாரின் அலுவலகத்திற்கு இந்நிகழ்ச்சி குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று மந்திரி புசார் அலுவலக வட்டாரம் கூறுகிறது.

இன்றுடன் மந்திரி புசார் காலிட் இப்ராகிமின் பதவி காலம் முடிவிற்கு வருகிறது. அவர் இன்று பிற்பகல் மணி 4.00 அளவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.