அரசமைப்புச் சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேச நிந்தனை குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறார்

 

Aziz Bari probeசிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படும் இரண்டாவது அறிவுக்கழகத்தினராகிறார்.

மலேசியன் இன்சைடர் இணையதளத்தில் அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்காக நாளை காலை மணி 11.00 க்கு சபாக் பெர்ணம் போலீஸ் நிலையத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அச்செய்தி தளம் இன்று கூறியது.

அசிஸ் பாரியை சுதந்திரத்திற்கான வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) அமைப்பின் வழக்குரைஞர் அபிக் எம் நூர் பிரதிநிதிப்பார்.

இதற்கு முன்னதாக, மலாயா பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷாரோம் மலாய் மெயில்Idris-Azmi1 ஓன்லைனில் தெரிவித்திருந்த கருத்துக்காக விசாரிக்கப்பட்டு பின்னர் தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மலேசியன் இன்சைடரில் வெளியிடப்பட்டுள்ள இரு கட்டுரைகளுக்காக அசிஸ் பாரி விசாரிக்கப்பட விருக்கிறார் என்று அந்த இணையதளம் கூறிற்று.

அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்கு எதிராக 100 க்கும் கூடுதலான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.