ஆகக் கடைசியாக தேச நிந்தனைச் சட்டம் பாய்ந்திருப்பது கர்பாலின் உறவினர்மீது

dalசட்டக் கல்வி மாணவரான  தல்பிந்தர்  சிங்  ஜில்,  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  நேற்றிரவு  கைது  செய்யப்பட்டார். முகநூலில்  பூமிபுத்ராக்களின்  உரிமைகள்  பற்றியும்   ஆட்சியாளர்கள்  பற்றியும்  கேள்வி  எழுப்பியதற்காக  அவர்மீது  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு புக்கிட்  அமான்  சைபர் குற்றப்  பிரிவு  போலீசார் ஜெஸ்ஸல்டன்  ஹைட்சில்  உள்ள  தல்பிந்தரின்  வீட்டுக்கு அவரைத்  தேடிச்  சென்றபோது  அவர்  அங்கில்லை.

காலஞ்சென்ற  டிஏபி  தலைவர்  கர்பால்  சிங்கின்  உறவினரான  அவர்,  தகவல்  அறிந்து  இரவு  மணி  10.45க்கு ஜாலான்  பட்டானி  போலீஸ்  தலைமையகத்தில்  சரணடைந்தார்.

போலீசார்  அவரிடம்  விசாரணை  செய்தனர். பின்னிரவு  1.30 அளவில்  போலீஸ்  பிணையில்  தாம்  விடுவிக்கப்பட்டதாக  தல்பிந்தர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“இன்னும் ஒரு  மாதத்தில்  திரும்பவும்  போலீஸ்  நிலையம்  செல்ல  வேண்டும். என்  கைரேகையைப் பதிவு  செய்தார்கள். என்னைப்  படம்  பிடித்தார்கள்”, என்றாரவர்.