கேவியெஸ்: டிஏபிதான் இனவாதக் கட்சி, அம்னோ அல்ல

kvsஈராண்டுகளுக்கு  முன்னர் பிபிபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய  அதன்  தலைவர்  எம்.கேவியெஸ்,  பாரிசான் நேசனலில் இனப் பாகுபாடு  காட்டப்படுவதாகவும்  அதனால்  அக்கூட்டணிக்கு  ஆதரவு  சரிந்து  வருவதாகவும்  கூறினார்.

ஆனால், இப்போது  அந்த  முன்னாள்  துணை  அமைச்சர்   பாட்டை  மாற்றிப்  பாடுகிறார்.  அம்னோ  இனவாதக்  கட்சி  என்று  டிஏபி  கூறியதை  மறுத்து  அதைத்  தற்காக்க  வரிந்து  கட்டிக்கொண்டு  களமிறங்கியுள்ளார்  அவர்.

டிஏபிதான்  இனவாதம்  நிரம்பிய  கட்சி  என்றும்  அம்னோவைக்  குற்றம்  சொல்வதன்வழி  அந்த  உண்மையை  அது  மூடிமறைக்கப் பார்க்கிறது  என்றும் கேவியெஸ்  சாடியுள்ளார்.

அம்னோ  இனவாதக்  கொள்கையைக்  கடைப்பிடித்து  பூமிபுத்ராக்களுக்கு  மட்டுமே  முன்னுரிமை  கொடுத்து  வந்திருக்குமானால்  இந்நாட்டு  மக்கள்  ஒரு  பல்லின  சமுதாயமாக  வாழ்ந்து  வந்திருக்க  முடியாது  என்றாரவர்.

“அம்னோ   இனவாதக்  கட்சியாக  என்றும்  இருந்ததில்லை. அதன்  தலைவர்கள்  கூட்டணிக்கு  மருட்டல்விடும்  வகையில்  எப்போதும் பேசியதில்லை”, என  அம்னோ  ஆன்லைனில்  கேவியெஸ்  கூறினார்.

அம்னோ  தலைவர்கள்  மற்ற  கட்சிகளுடன்  சேர்ந்து  அரசாங்கங்களை  அமைத்திருப்பதே  அம்னோ இனப்பாகுபாடு  கொண்ட கட்சி  என்பதற்கு  தெளிவான  சான்று  என்றாரவர்.