அரசாங்கத்தால் வடக்கு தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது: அமைச்சர் ராஜித

rajithaஇலங்கை அரசாங்கம் வடக்கில் பெருமெடுப்பில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும், வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் உதவியுடன் கூட்டுறவு திணைக்களத்தினால் யாழ். அரியாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை திறப்பு விழாவில் இன்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எமக்குத் தெரியும். அதேபோன்று இந்தமக்களின் தேவைகளும் எமக்குப் புரியும். இந்த மக்களின் உரிமைகளுக்காக கடந்த காலங்கள் முதல் இன்றுவரை பல்வேறு வழிகளிலும் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.

இங்குள்ள அரசியல் கட்சிகளில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியினர் ஆரம்பகாலம் முதலே எம்மோடு இணைந்த உறவாக செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது.

மாகாண அமைச்சர் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அரசியலுக்கப்பால் எம்முடன் இணைந்து செயலாற்றி வருகின்றார்.

இதற்கமைய வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது வடக்கு மீனவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதற்கமைய வடக்கிற்குத் தேவையான கடற்தொழில் உபகரணங்கள் அனைத்தையும் மாகாண சபையினூடாக மேற்கொள்வதென்றும் வடக்கு கிழக்கிற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு அதிகாரிகள் அச்சம் கொண்டிருந்த வேளையிலும் உடனடியாக நிலைமைகளைப் பர்வையிடுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: