மாலினிக்கு உதவ, அமைச்சர் முன்வரவேண்டும்!

மாலினி 1காராக் 1/10/2014 – திருமதி மாலினி வாசுதேவன் வயது 36, இரு சிருநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிறமங்களை எதிர்நோக்கி வருகிறார். மருத்துவர் அவரை dialysis எனப்படும் சிறுநீரகம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முறை செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டனர்.

காராக் நகரில் Dialysis Centre இல்லாத சூழ்நிலையில் அவர் ஒவ்வொரு முறையும் பெந்தோங் நகருக்கு செல்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யாராவது ஒரு சிருநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தால் அவருக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்து குனப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கின்றனர். தன் உடன் பிற்ந்த தங்கை முதலில் முன் வந்திருக்கிறார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் பின்வாங்கி விட்டாதாக மாலினி வருத்த த்தோடு தெரிவித்தார்.

மிக இளம் வயதில் மாலினியின் நிலை மிக வருத்தமளிக்கத்திக்கதாக உள்ளது. இந்த வேலையில் அவரை நேரில் சென்று சந்தித சபாய் சட்டமன்ற உறுப்பினர் மான்புமிகு காமாட்சி தெரிவித்தார்.

உலகில் பல வகை தானங்கள் இருப்பினும் உடல் உருப்பு தானம் மிகவும் மேன்மையானதாக கருதுவதாக அவர் தெரிவித்தார். நாம் இறந்த பிறகு மண்ணுக்கும் நெருப்பிக்கும் நம் உடலை வெறுமனே தாரை வார்த்து கொடுப்பதை விட மற்றவர் வாழ்வுக்கு உதவுவதற்க்கு அனைவரும் உடல் உருப்பு தானம் செய்து கொள்வது அவசியமாகும்.

மாலினியைப் போல் நம் நாட்டில் அனேகர் இருந்தாலும் இவருடைய நிலையை நேரில் பார்க்கும் போது உடனே உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மேலோங்கிநிற்கிறது.

பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள், கனரக வாகனம் ஓட்டும் தனது கணவர் இவர்களுக்கு நல்ல அம்மாவாகவும் அன்பான மனைவியாகவும் விளங்கும் மாலினி தனது உடல் நிலை மோசமான நிலையில் செய்வது அறியாது தின்டாடுகிறார்.

அவருடைய வயதும் குடும்ப சூழ்நிலையும் கருதி மலேசிய சுகாதர அமைச்சு மாலினியின் சிறுநீரக மாற்று சிகிச்சையை விரைவில் நடத்துவதற்கு ஆவனச் செய்யும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.

கடந்த இரணடரை ஆண்டுகளாக் சிறுநீரகப்பிரச்சனயில் அல்லாடிக் கொண்டிருக்கும் மாலினி தனது எதிர்க்காலம் குறித்து வெகுவாகவே கவலைப்படுகிறார்

மாலைனியின் கனவர் திரு வாசுதேவன் தன் அண்ணனிடம் லாரி ஓட்டுனராக இருக்கிறார். தன் மனைவியின் உடல் நிலை காரணமாக அவரால் வேறு வேலைக்கு போக முடியாத நிலை. ஒரு வாரத்தில் 3 முரை dialysis- க்கு தன் மனையை அழைத்து செல்ல வேண்டும். அடிக்கடி மாலினிக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதால் அவர் அருகில் இருக்க வேண்டிய கட்டாந் நிலை ஏற்படுகிறது. வாசுதேவன் பலரிடம் தன் மனைவியின் நிலையை கூறி  உதவி கேட்டிருக்கிறார்.

அமைச்சர் உதவ வேண்டும்  

ஒரு முறை சுகாதார துறை அமைச்சரான டத்தோ சுப்ரமணியம்  பெந்தோங் நகர் வந்திருக்கிறார். அப்பொழுது அவரை நேரில் சந்தித்து தன் நிலையை கூறியிருக்கிறார். உடனே செய்வதாக கூறி ஒரு வருடத்திற்கு மேல் உருண்டோடி விட்ட நிலையில் அவரிடமிருந்து எந்த தகவலும் இதுவரை இல்லை என்று நம்பிக்கை இழந்து கூறினார்.

OLYMPUS DIGITAL CAMERAஉலூ கெலாங்-இல் மான்புமிகு கமலநாதனிடம் உதவி நாடிய போது அவர் RM 500 கொடுத்து விட்டு இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்று கையை விரித்த சம்பவமும் வாசுதேவனின் மனதில் வடுவாக உள்ளது. நாங்கள் பணம் கேட்டு யாரிடமும் போகவில்லை; மாராக் மாற்று அருவை சிகிச்சையை சீக்கிரம் நடத்துவதற்கான உதவியை செய்ய தான் கேட்டு அழைக்கிறோம் என்றார்.

மாலினியின் மூத்த மகன் கனதீபன் வயது 15, வீட்டு வேலைகளில் மிகவும்  உதவியாக இருக்கிறார். பள்ளி முடிந்து அம்மாவுக்காக அத்தனை உதவிகளையும் செய்யும் மிக நல்ல பிள்ளையாக இருக்கிறார். இளைய மகன் ஷர்வின் வயது 8, பால்மனம் மாறாத குழந்தை அம்மாவின் நிலையை புரிந்தும் புரியாமலும் வளர்ந்து வருகிறான்.

மாலினியின் நிலை ஒரு தனி மனுஷியின் பிரச்சனையாக என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சனையாகவே பார்க்க முடிகிறது என்று காமாட்சி கூறுகிரார்.

தாயின் அரவனைப்பிலும் கண்டிப்பிலும் வளரும் இந்த சிறுவர்கள் தன் தாய் இல்லாத நிலையில் என்ன ஆவார்கள். பணம் தேடும் வேலையில் தந்தை, தனித்து விட்ட நிலையில் இவர்கள் சமுதாயத்தின் சிறந்த பிள்ளைகளாக வளர்வது கேள்வி குறியாகிவிடும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு 70 ஆயிரம் பேர் வரிசை பிடித்து காத்திருக்கும் சிறுநீரக மாற்று அருவை சிகிச்சைக்கு மாலினியின் நிலை இன்னும் மோசமடைவதற்குள் சிகிச்சை பெற யாராவது முன்வருவார்களா? இந்த செய்தியை பார்த்து மாலினியின் உடன் பிறந்தவர்கள் மனம் வைத்தால் மாலினிக்கு மறு பிறவி கொடுத்த புண்ணியம் அவர்களை சேறும்.