நல்ல தலைவர்கள் மதுவை ஊக்குவிக்க மாட்டார்கள்

muftiபீர்  விழாக்களில்   கலந்துகொண்டு  “அழிவுக்கு”  ஆதரவுகொடுக்கும்  அரசியல்  தலைவர்களை பெர்லிஸ்  முன்னாள்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்  சாடினார்.

ஒரு நல்ல  தலைவர்  “அழிவுக்கு”  ஆதரவுதேட  மாட்டார்  என  முகம்மட் அஸ்ரி  கூறினார்.

“இந்நாட்டில்  அரசியல்  தலைவர்கள் பீர்  விழாக்களை  ஊக்குவிக்க  இயக்கம்  நடத்துகிறார்களே, எப்படி? எந்தக் கலாச்சாரத்தின்,   எந்த  நியாயத்தின்  அடிப்படையில்  அவ்வாறு  செய்கிறார்கள்?”, என்றவர் வினவினார்.

இம்மாதத் தொடக்கத்தில் பக்கத்தான்  தலைவர்கள்  பலர்  சர்ச்சைக்குரிய  அக்டோபர்பெஸ்ட்  பீர் குடிக்கும்  விழாக்களுக்கு  ஆதரவு  தெரிவித்தனர்.

பல  எம்பிகளும்  சட்டமன்ற  உருப்பினர்களும்  பீர்  விழாக்களில்  நேரடியாகக்  கலந்துகொண்டு அவ்விழா  ஏற்பாட்டாளர்களுக்கு “ஆதரவையும் காண்பித்து”க்  கொண்டார்கள்.