பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள டிபிகேஎல் நிலங்கள் ‘கமுக்கமாக விற்கப்பட்டன’

tanகோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம் (டிபிகேஎல்)  அதன்  நிலங்களைச்  சில  தரப்பினருக்கு   இரகசிமாக  விற்பனை  செய்திருப்பதாக   செராஸ்  எம்பி  டான்  கொக்  வாய்  கூறினார்.

“திறந்த  டெண்டர்கள்  அழைக்கப்படும்  என  விளம்பரப்படுத்தப்பட்ட  சில  திட்டங்கள்  கடந்த  இரண்டு, மூன்று  ஆண்டுகளில்  சில  தரப்புகளுக்குக்  கமுக்கமாக  விற்கப்பட்டுள்ளன.

“நேரடிப்  பேரம்பேசி எல்லாம்  முடித்துக்கொள்ளப்பட்டுள்ளன”. இன்று  டிபிகேஎல் பட்ஜெட் விளக்கமளிப்பில்  கலந்துகொண்ட  டான்  அதன்பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

டிபிகேஎல்-இன்  புதிய  தலைமையகம் கட்டுவதற்காக  ஒதுக்கப்பட்டிருந்த பகுதி  உள்பட  பல  நிலப்  பகுதிகளை  டிபிகேஎல்  விற்பனை  செய்திருப்பதாக  டான்  தெரிவித்தார்.

“டிபிகேஎல்  ஏழையாகி  விட்டதா அல்லது  பணம்  இல்லையா? அல்லது  நில  விற்பனைவழி  சிலர்  கொள்ளை  இலாபம்  அடைகிறார்களா?”,  என்றவர்  வினவினார்.

அக்டோபர் 27-இல்  நாடாளுமன்றத்தில்  அது  பற்றி  கேள்வி  எழுப்பப்போவதாக   டான்  கூறினார்.