தேச நிந்தனைச் சட்டம் இருக்கிறது, ஜாக்கிரதை, எச்சரிக்கிறார் அமைச்சர்

 

Big mouth minister1தம்மை குறைகூறிய இருவரை வாயாடிகள் என்று வர்ணித்த நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் தேச நித்தனைச் சட்டம் இருப்பதைக் கவனித்தில் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அமைச்சர் டாலான் மலேசியாவின் தேச நிந்தனைச் சட்டம் குறித்து அமெரிக்க தெரிவித்திருந்த கருத்தைச் சாடியதற்காக பிகேஆரின் அலோர் செதார் நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஹிசியாவ் லியுங் அவரை வடகொரியா தலைவருடன் ஒப்பிட்டிருந்தார். அதனால் சினமடைந்த அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பிகேஆரின் சட்டப் பிரிவு தலைவர் லத்தீபா கோயாவும் டிவிட்டர் மூலம் அமைச்சரை வடகொரிய தலைவருடன் ஒப்பிட்டிருந்தார்.

அவ்விருவரையும் வாயாடிகள் என்று கூறிய அமைச்சர் டாலான், தேச நிந்தனைச் சட்டம் இருக்கிறது என்பதை அவர்களுக்கு Big mouth minister2நினைவுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த லத்தீபா அமைச்சர் டாலான் காலனித்துவ சட்டத்தை காட்டி அவரைக் குறைகூறுபவர்களை மிரட்டுகிறார் என்று டிவிட் செய்தார்.

நேற்று, சினார் ஹரியான் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் மலேசிய விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது, ஏனென்றால் நாட்டின் எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் வாஷிங்டனின் பொறுப்பு அல்ல என்று அமைச்சர் அப்துல் ரஹ்மான் கூறியிருந்தார்.