ஜஹிட்: தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டிய நேரம் வந்தாயிற்று

zahidஒற்றுமையின்  பொருட்டு  தாய்மொழிப் பள்ளிகளை  அகற்ற  வேண்டிய  தருணம்  வந்துவிட்டது  என்று  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜஹிட்  ஹமிடி  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

“வந்த  நாட்டை  மறந்து விடுங்கள்.  ஏனென்றால்,  இன்று  நாம்  அனைவருமே  மலேசியர்கள்”, என்றவர்  கூறியதாக  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  நாளேடு  அறிவித்துள்ளது.

தாய்மொழிப்  பள்ளிகள்  தொடர்வதும்  அந்நிலை  மாற்றப்படாமல்  இருப்பதும்தான்  நாட்டில்  இன  வேற்றுமை  விரிவடைந்து  வருவதற்குக்  காரணம்  என  அமைச்சர்  தெரிவித்தார்.

இது தம்  தனிப்பட்ட  கருத்து  என்றும்  தம்  அமைச்சின்  கருத்தோ  அரசாங்கத்தின்  கருத்தோ  அல்ல  என்பதையும்  ஜஹிட்  வலியுறுத்தினார். நேற்று,  யுனிவர்சிடி  கெபாங்சான்  மலேசியாவில்  மலேசிய  இளைஞர்  நாடாளுமன்ற  நிகழ்வில்  கலந்துகொண்டபோது  அமைச்சர்  இவ்வாறு  பேசினார்.