தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும்: உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு குலா கண்டனம்

-மு. குலசேகரன், அக்டோபர் 20, 2014.

kula-280x300இன்றைய உத்துசான் மலேசிய  நாளிதழில்  உள்துறை அமைச்சர்  சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும்  ஒரே மொழிப் பள்ளிகளாக  மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததாக  செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்தி மிகவும் கண்டனதுக் குறியது.

இந்த நாட்டில்  சீன தமிழ்ப் பள்ளிகள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்ற உறுதி மொழி பிரதமரால்  ம.சீ.ச மாநாட்டில் வழங்கப்பட்டு ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பிரதமருக்கே  சாவல் விடுவது போல் இருக்கிறது.

ஒரே மலேசியா  என்று பிரதமர்  கூறினாலும் அதற்கு தாம் உடன் பட வில்லை என்று கூறுவது போலவும் இது உள்ளது.
சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எந்த காலக் கட்டத்திலும்  இன ஒற்றுமைக்கு ஊறு விளைவித்துள்ளதாக ஆதாரங்கள் இல்லை.

அராசாங்கத்தின் நிதி ஒதுக்குவதிலும், தளாவாடங்கள் கொடுப்பதிலும்  , உபகாரச் சம்பளம் வழங்குவதிலும் உள்ள பாகுபாடுகள்தாம் மக்களை  ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்பவை.

ஒரே மொழிக் கொள்கையை ஏற்படுத்தி எல்லா மாணவர்களும் ஒரே பள்ளியில் பயில்வதனால் ஒற்றுமை மேலோங்கும் என்பது அர்த்தமில்லதா ஆதாராமில்லாத கூற்று.

ஒற்றுமை வளர எல்லா மாணவர்களும் ஓரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று கருத்து கூறியிருக்கும் சாஹிடி, மாரா தொழிற் நுட்பக்கல்லூரிகளில் ஒரே இன மாணவர்கள் மட்டுமே பயில  இடம் கொடுக்கும் அரசாங்கக்க் கொள்கையை மாற்ற முன் வருவாரா ?

அராசாங்கத் துறையில் 90 % ஒரே இன ஆதிக்கத்தை மாற்ற முன்வருவாரா?

வளமும் பழமையும் முதிர்ச்சியும் அடைந்த மொழிகளான சீனமும் தமிழும்  இந்த நாட்டில்  பயிற்றுவிக்கப்படுவது  குறித்து அவர் பெருமை கொள்ளாமல், அதை ஒழிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு சாஹிடி சொல்லும் கருத்தை  மற்ற பாரிசான் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக சாட வேண்டும்.

குறிப்பாக,  தமிழ்ப்பள்ளிகளின் காவலன் எனக்கூறி கொள்ளும்  ம.இ.காவும் , சீனர்களின் அரண் எனக்கூறும் ம.சீ சாவும் அடுத்த அமைச்சரை கூட்டத்தில் இது குறித்து விவாதித்து, இது போன்ற  தேச ஒற்றுமையை குலைக்கும்ம் மக்களை பயமுறுத்தும்   செய்திகளை வெளியிடுபவதினின்றும் உள் துறை அமைச்சர் சாஹிடியை அமைச்சரவை தடுத்து, கண்டிக்கவேண்டும் என்று பிரதமருக்கு
நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலேயே தாய் மொழிப்பள்ளிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கும் போது  மீண்டும் மீண்டும் அதே பிரச்சனையை எழுப்புவது மலாய்க்காரர் அல்லாதோரின் மனதில் அச்சத்தையும், அராசாங்கத்தின் மீது  உள்ள நம்பகத் தன்மையையும் பெரிதும் பாதிக்கும்.

மலாய்ப் பள்ளிகள் எப்படி இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டதின்படி  உள்ளதோ அதே நிலைதான் சீன தமிழ்ப்பள்ளிகளும் என்ற Zahid Hamidi-Negara0-kuஉண்மையை சாஹிடி போன்ற அம்னோ தலைவர்களும்  பெர்காச தலைவர் இப்ராஹிம் அலியும் உணரவேண்டும்.
அதை அவ்வப்போது நாட்டின் பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அப்படி அடிக்கடி  நாட்டின் பிரதமர் உத்தரவாதம் அளிப்பது, மக்கள் மத்தியில் ஒரு தவறான என்ணத்தை உண்டு பண்ணும். அதாவது சீன தமிழ்ப்பள்ளிகள் பிரதமரின் தயவினாலும் அவரின் விருப்பதின் பேரிலும்  இயங்குகின்றன போன்ற ஒரு மாயை உண்டு பண்ணும்.

மலேசியாவில் வாழும் ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின்  மதம் இனம்  மொழி குறித்து  அரசியல் சாசனத்தில் விரிவாகவும் திடமாகவும் பதிவு செய்யபட்டுள்ளன. இதன் தொடர்பாக வரும்  உரிமைகளையும் உத்தரவாதங்களையும்  அடிக்கடி கேள்வி எழுப்பி மக்களை  குழப்பி அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது சாஹிட் ஹமிடி போன்ற இனவாதிகள்தான் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.