கத்தி படத்தின் எதிரொலி? சென்னையில் முன்னணி திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள   லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்  ‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதை எதிர்த்து மாணவர்கள்  மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு  பல போராட்டங்களை நடத்தி வருன்கிறனர். இந்த நிலையில் தீபாவளி அன்று கத்தி திரைப்படம் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தி படத்தை   லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியிடக்கூடாது  என்று நேற்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றிக்கு எச்சரிக்கை விடுத்து.

இதனை அடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று  கத்தி பட குழுவினர் திரைப்படம் வெளியிடுவதற்கு பாதுகாப்பு வழங்கும் படி கேட்டு இருந்தனர். ஆனால் சென்னை கமிஷனர் தங்கள் பாதுகாப்பு வழக்க முடியாது என்றும் லைக்கா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுமாறு படக்குழுவினருக்கு  அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதற்கு ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள   லைக்கா நிறுவனம் ஒத்துவராத நிலையில் படத்தினை வெளியிட முடிவு செய்தனர். இதற்கு மாணவர்கள்  மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு  கடும் கண்டனம் தெரிவித்ததோடு திரைப்படம்  லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்தால் போராட்டங்களை முன் எடுக்க வேண்டி வரும் என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இந்த நிலையில்  இன்று அதிகாலை  சென்னையில் உள்ள முன்னணி  திரையரங்குகள் சத்தியம் மற்றும் வூட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நள்ளிரவில் இனம்தெரியாத  நபர்கள் பெட்ரோல் குண்டு  வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்துடன், கம்பி மற்றும் பொல்லுகளுடன் சென்று  தாக்கியதில் திரையரங்க வளாகம், திரையரங்கின் முன் பகுதியில்  இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.இதனால்  திரையரங்கு முன்பகுதி பயங்கர சேதமடைந்தது. மேலும் பல திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் தகவல்கள் வெளிவருகின்றன.

 

திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர்!

ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள   லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்  ‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதை எதிர்த்து மாணவர்கள்   மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு  பல போராட்டங்களை நடத்தி வருன்கிறனர்.

இந்த நிலையில் தீபாவளி அன்று கத்தி திரைப்படம் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தி படத்தை    லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியிடக்கூடாது  என்று நேற்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றிக்கு எச்சரிக்கை விடுத்து.

இந்த நிலையில்  இன்று அதிகாலை  சென்னையில் உள்ள முன்னணி  திரையரங்குகள் சத்தியம் மற்றும் வூட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு  வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இத் தாக்குதலில் திரையரங்கின் முன் பகுதியில்   இருந்த அலங்கார கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் திரையரங்கிற்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

இத் தாக்குதலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடகழகத்தினர்  5 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

கோவை கு.ராமகிருஷ்ணன்  தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் சேர்ந்த ஜெயபிரகாஷ், வாசுதேவன், ஜெயக்குமார், அப்பு மற்றும் கிருஷ்ணா ஆக்கியவர்களே காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.