தீபாவளிக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசுக்கு இந்துக்கள் கோரிக்கை

diwali_001தீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா, வங்கதேசம், மலேசியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் பாகிஸ்தானில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் குமார் கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை எடுத்துக் கொள்வதற்கு எங்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது.

இங்குள்ள சிறுபான்மை சமுதாயத்தினரின் பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் அக்கறையில்லை.

முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசு, தீபாவளி தினத்தன்று ஒவ்வொரு இந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ.10 லட்சம் சிறப்பு நிதி வழங்கும் முறையை அறிமுகம் செய்தது.

இதேபோன்று தற்போதைய அரசும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.