5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாகிறது! யூனிசெப் அதிர்ச்சி தகவல்

child_dead_001சர்வதேச அளவில் வன்முறையால் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாவதாக யூனிசெப் அறிவித்துள்ளது.

ஐ.நா குழந்தைகள் நல நிறுவனமான யூனிசெப்-பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

அதில் சர்வதேச அளவில் வன்முறையால் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக நகர்புறமயமாகுதல், வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை போன்றவையே இச்சம்பவங்களுக்கு காரணமாகும்.

மேலும் உலகில் நாள் ஒன்றுக்கு 345 குழந்தைகள் வன்முறையால் உயிரிழக்கின்றனர் என்றும், அதை தடுக்க சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.