சிலாங்கூரில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் புத்துயிர் பெறும்

houseசிலாங்கூர்  அரசு  அம்மாநிலத்தில்  கைவிடப்பட்ட  வீடமைப்புத்  திட்டங்களுக்குப்  புத்துயிர்  அளிக்க  ரிம 20மில்லியன்  நிதி  ஒன்றை  ஏற்படுத்தியுள்ளது.

அதில்  குறைந்த-விலை  வீடுகளுக்கே  முன்னுரிமை  கொடுக்கப்படும்  என  வீடமைப்புக்குப்  பொறுப்பான  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  இஸ்கண்டர்  அப்  சமட்  கூறினார்.

“இதன்கீழ்  உதவிபெறும்  நான்கு  வீடமைப்புத்  திட்டங்கள்  இதுவரை  அடையாளம்  காணப்பட்டுள்ளன. ஆயிரம்  வீடுகளைக்  கொண்ட  திட்டங்கள்  அவை.  மற்றவை  பின்னர்   தேர்ந்தெடுக்கப்படும்”, என்றாரவர்.

மலேசியாவில்  மிக  அதிகமான  கைவிடப்பட்ட வீடுகளைக்  கொண்ட  மாநிலமாக  சிலாங்கூர்  விளங்குகிறது.