பினாங்கில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை

cookபினாங்கில்  அங்காடிக்  கடைக்காரர்கள்  வெளிநாட்டுச்  சமையல்காரர்களை  வேலைக்கு  வைத்துக்கொள்ளத்  தடை  விதிக்கப்படும். ஒரு  ஆய்வில் 86  விழுக்காட்டினர்  ஆதரவு  தெரிவித்ததை  அடுத்து  பினாங்கு  அரசு  அம்முடிவுக்கு  வந்துள்ளது.

அடுத்த  ஆண்டிலிருந்து  அக்கொள்கை  நடப்புக்கு  வருவதாக  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

“வெளிநாட்டவர்  சமையல்காரர்களுக்கு  உதவியாக,  கடை  உதவியாளர்களாக  இருக்கலாம். ஆனால்,  தலைமை  சமையல்காரர்கள்  உள்நாட்டவராகத்தான்  இருக்க  வேண்டும்”, என  லிம்  கூறினார்.

இக்கொள்கை  அங்காடிக் கடைகளுக்கும்  விற்பனை  மையங்களில்  உள்ள  உணவுக்  கடைகளுக்கும்   மட்டுமே. உணவகங்களுக்கு  விலக்களிக்கப்படும்.