ஜப்பான் நாடே முழுமையாக அழிந்து விடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

japan_eruption_001பயங்கர எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பான் முழுவதுமே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1,20,000 ஆண்டுகளாக எவ்வளவு கால இடைவெளியில் எந்த அளவில் எரிமலை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை யொஷியுகி டட்சுமி(Prof. Yoshiyuki Tatsumi) தலைமையிலான புவி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆய்வில், அடுத்த 30 ஆண்டுகளில் கோபே(Kobe) நகரத்தை மிகப்பெரிய பூகம்பம் தாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது தெரியவந்துள்ளது.

தெற்குமுனையில் உள்ள கியூஷுவில்(Kyushu) உள்ள எரிமலையில் கடந்த 1,20,000 ஆண்டுகளில் பயங்கரச் சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இன்னொரு பேரழிவு சீற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதிலிருந்து வெளிவரும் எரிமலைக் குழம்பு மாற்றும் எரிபாறைகள் 2 மணிநேரத்தில் 70 லட்சம் மக்களை அழித்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எரிமலை சீற்றத்தினால் கிளம்பும் சாம்பல் மேற்குக் காற்றினால் உள்புறத் தீவான ஹோன்சு வரை பரவும் அபாயம் உள்ளது. இதனால் ஜப்பான் முழுதும் வாழ முடியாத நிலப்பிரதேசமாகிவிடும்.

இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறுகையில், மிகப்பெரிய எரிமலை சீற்றம் ஜப்பான் என்ற நாட்டை இல்லாமல் அழித்து விடும் என்று கூறுவது மிகையான கூற்று அல்ல என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு 7.2 ரிக்டர் அளவில் கோபே நகரத்தைப் பூகம்பம் தாக்க அதில் 6,400 பேர் மரணமடைந்து 4,400 பேர் காயமடைந்ததையும் ஆய்வாளர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

இதற்கு காரணம், கோபே நகர அபாயம் குறித்து பூகம்பம் தாக்குவதற்கு முதல் நாளே இந்த ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.