பெண் போராளிகளை கண்டு நடுநடுங்கி ஓடும் ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_fears_001ஈராக்-சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஷ் பெண் போராளிகளை கண்டு அஞ்சி ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்.

தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கொபேனி (Kobani) நகரை தங்கள் வசமாக்க கடும் போரை நடத்தி வருகின்றனர்.

இந்த கொபேனி நகரில் குர்து இன மக்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இதில் பெண் போராளிளே அதிக ஆர்வம் காட்டி தங்களது இடத்தை காத்துக்கொள்ள தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களின் கையினால் செத்து மடிந்தால் சொர்க்கம் கிடைக்காது என்பதை ஐ.எஸ்.ஐ.எஸ் ஐதிகமாய் கொண்டுள்ளனர்.

எனவே பெண் போராளிகளை பார்த்தால் நேருக்கு நேர் நின்று தாக்குதலை நடத்தாமல் தீவிரவாதிகள் அஞ்சி ஓடிவிடுகின்றனர். -http://world.lankasri.com