கட்டாய திருமணம், கற்பழிப்பு: கதறும் சிறுமிகள் (வீடியோ இணைப்பு)

Boko-Haram-leaderபோகோ ஹாரம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த சிறுமிகளும், பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி மனித உரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதால், அரசை மிரட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 300 பள்ளி மாணவிகளையும், பிறகு நூற்றுக்கணக்கான பெண்களையும் கடத்தி சென்றனர்.

இவர்களை கட்டாயக் கல்யாணம், கடுமையான வேலைகளைச் செய்யச் சொல்வது, அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்வது, மன ரீதியாக உளைச்சல் கொடுப்பது, மத மாற்றம் செய்வது மற்றும் கூட்டாக கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆயுதங்களை தூக்க சொல்வது, தனிமையில் அடைப்பது, பயமுறுத்துவது, முகாம்களை சுத்தம் செய்ய கட்டளையும் இட்டுள்ளனர்.

இந்நிலையில் 15 சிறுமி ஒருவருக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்தது மட்டுமல்லாமல், அவளை மணமுடித்த தீவிரவாதி தினந்தினம் மிக கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நினைவுகள் மனவுளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே நைஜீரிய அரசு இந்த தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த கொடுமைகள் தொடரும் எனவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. -http://world.lankasri.com