இஸ்லாத்துக்கு எதிரானது என்ற தோற்றத்தைக் களையும் முயற்சியில் பிஎஸ்எம்

arulபார்டி  சோசலிஸ்  மலேசியா(பிஎஸ்எம்),  அது  இஸ்லாத்துக்கு  எதிரான  கட்சி  என்ற  தோற்றப்பாட்டைத் திருத்தி  அமைக்க  முயலும்.

இதன்  பொருட்டு  அது “இஸ்லாமும்  சோசலிசமும்”  என்னும்   சிறு விளக்கநூலை  வெளியிடும்  என  பிஎஸ்எம்  தலைமைச்  செயலாளர்  எஸ்.அருட்செல்வன் கூறினார். அந்நூல் தொழிலாளர்  விடுதலை  பற்றி  நபிகள்  நாயகம்  தெரிவித்த  கருத்துகளை  அடிப்படையாகக்  கொண்டிருக்கும்.

அதிகமான  மலாய்க்காரர்கள்  உறுப்பினர்களாகி  வருவதால் அக்கட்சி  இம்முயற்சியில்  இறங்கியுள்ளது.