இப்ராகிமைத் தற்காத்துப் பேசுகிறார் மகாதிர்

mahபெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  “பைபிள்களை  எரிக்கச்  சொன்னது”  தேச  நிந்தனைக்  குற்றம்  அல்ல  என்கிறார் டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“முஸ்லிம்களும்  முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில்  சண்டை  மூட்டுவது  அவரின்  நோக்கமல்ல”, என்று  முன்னாள்  பிரதமர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

திருக்குர்ஆன்  நூல்கள்கூட  மிகவும் பழையதாக  விட்டால்  எரிப்பது  உண்டு  என்று  கூறிய  மகாதிர்,  தீய  நோக்கம்  இல்லாதவரை  அப்படிச்  செய்வது  தப்பல்ல  என்றார். அதைப்  போன்றதுதான்  இதுவும்.

ஆனாலும், முஸ்லிம்கள்  பைபிளுக்கு  மரியாதை  கொடுக்க  வேண்டும், பிடிக்கவில்லை  என்பதற்காக  அதைத்  தரையில்  போட்டு  மிதித்து  அவமதிக்கக்  கூடாது  என்றாரவர். .