முன்னாள் நீதிபதி வழக்குரைஞராக மாறி வாதாடக்கூடாது

gopalகூட்டரசு  நீதிமன்ற முன்னாள்  நீதிபதி  கோபால்  ஸ்ரீராம்,  அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞராக  நீதிமன்றத்தில்  வாதாடுவது  குறித்து  அரசியல்  கட்சித்  தலைவர்கள்  கேள்வி  எழுப்பியுள்ளனர்.  அது  வழக்குரைஞர்  மன்றத்தின்  தீர்மானத்தை  மீறுவதாகும்  என்றவர்கள்  தெரிவித்தனர்.

கெராக்கான்  இளைஞர் தலைவர்  டான்  கெங்  லியாங்,  வழக்குரைஞர்  மன்றம்  இவ்வாண்டு  மார்ச்  15-இல்,  பணிஓய்வு பெற்ற  நீதிபதிகள்  வழக்குரைஞர்களாக  நீதிமன்றத்தில்  முன்னிலை  ஆவதற்குத்  தடைவிதிக்கும்  தீர்மானம்  ஒன்றை  நிறைவேற்றி  இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“முன்னாள்  கூட்டரசு  நீதிபதி  ஒருவர் அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞராக  வாதாட  விதிவிலக்கு  எதுவும்  அளிக்கப்பட்டுள்ளதா  என்பதை மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  விளக்க  வேண்டும்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.

டிஏபி எம்பி  லிம்  லிப்  எங்-கும்,  முன்னாள்  நீதிபதி  ஒருவர் வழக்குரைஞராக  வாதாடுவதில்   ஒரு  வழக்குரைஞர்  என்ற  முறையில்  தமக்கும்  உடன்பாடில்லை  என்றார்.