அன்வார் மேல்முறையீடு வழக்கு: “புதிதாக ஒன்றும் இல்லை”

anwar 2nd day1அன்வார் இப்ராகிம்மின் மேல்முறையீடு விசாரணையின் 3 ஆவது நாளான இன்று அன்வாரின் வழக்குரைஞர் ராம் கர்ப்பால் அவரது வாதத்தை இன்று தொடர்கிறார்.

பெடரல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் காலை மணி 9.30 க்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் கர்ப்பால் அவரது வாதத்தை முடித்துக் கொண்ட பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா அவரது வாதத்தை தொடங்குவார்.

அன்வாரின் வழக்குரைஞர்கள் கடந்த இரு நாட்களாக முன்வைத்த வாதத்தில் “புதிதாக ஒன்றும் இல்லை” என்று ஷாபி அப்துல்லா நேற்று கருத்துரைத்தார்.

வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை வரையில் தொடரலாம் என்று கூறப்படுகிறது.

இன்ரு காலை மணி 8.00 அளவில் அன்வார் ஆதரவாளர்களின் ஒரு சிறிய கூட்டத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் காணப்பட்டனர்.

நேற்று நடந்தது போலல்லாமல், அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் காணப்படவில்லை.

நீதிமன்ற அறைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கமாருடின் ஜாப்பார், வோங் சென் மற்றும் பத்து புரூக் சட்டமன்ற உறுப்பினர் ஸைட் அஸ்மான் ஸைட் முகமட் ஆகியோர் இருக்கின்றனர்.

அன்வாரின் வழக்குரைஞர்களான சங்கீதா கௌவுர் மற்றும் எரிக் பால்சென் ஆகியோர் விசாரனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.