கேஎல்ஐஏ2 வெள்ளப் பெருக்கு ‘அனைத்துலக ஜோக்’ஆக மாறியுள்ளது

apronகேஎல்ஐஏ2-இல், சில இடங்கள்   அமிழ்ந்து  போயிருப்பது  “அனைத்துலக  ஜோக்”  ஆக  மாறி  உள்ளது. ஆனால்,  அதிகாரிகள்  அது  ஒரு  மோசமான  பிரச்னை  என்பதைத்  தொடர்ந்து  மறுத்து  வருகிறார்கள்  என  டிஏபி  எம்பி  ஒருவர்  கூறினார்.

அவ்விமான  நிலையத்தின்  தகுதி  பற்றி  முழு  அறிக்கையை  நாடாளுமன்ற  பொதுக் கணக்குக் குழுவிடம்  தாக்கல்  செய்யுமாறு  நான்கு  வாரங்களுக்கு முன்பே மலேசிய  விமான  நிலைய  ஹொல்டிங்ஸ்  பெர்ஹாட்டிடம் கூறப்பட்டது  என்றும்  அது  இன்னும்  அறிக்கை  தாக்கல்  செய்யவில்லை  என்றும்  டோனி  புவா  கூறினார்.

விமான  நிலைய  ஊழியர்கள்,   விமான  நிலையத்தின் தாழ்வான பகுதிகளில்  தேங்கிக்  கிடக்கும்  நீரை  அள்ளி  அள்ளி  சாக்கடைகளில்  கொட்டுவதைக்  காண்பிக்கும்   காணொளிகள்  யு-டியுப்பில்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருப்பது பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.

அறிக்கை  தாக்கல்  செய்யாதது  பற்றிக்  குறிப்பிட்ட  அந்த  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி,  அதிகாரிகள்  எதையாவது  மூடி  மறைக்கப்  பார்க்கிறார்களா   எனவும்  வினவினார்.