குறுகிய காலம் உயர்ந்திருந்த நஜிப்மீதான தரமதிப்பீடு மீண்டும் சரிந்தது

ratingபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் செயல்திறன்  மீதான  தரமதிப்பீடு ஆறு  விழுக்காடு  சரிந்து  ஜூன்  மாத அளவான 48 விழுக்காட்டுக்கே  திரும்பியுள்ளது.

ஜூனுக்கும்  ஆகஸ்டுக்குமிடையில்  அவரின்  செயல்திறன்   மீதான  மதிப்பீடு  உயர்ந்திருந்தது  என  சுயேச்சை  கருத்துக்கணிப்பு  அமைப்பான  மெர்டேகா  மையம்  கூறிற்று.

ஆகஸ்டில்  38 விழுக்காடாக  இருந்த  நஜிப்மீது  அதிருப்தி  கொண்டோர்  எண்ணிக்கை,  இம்மாதம் 45 ஆக உயர்ந்தது  என  அது  கூறியது.

“தரமதிப்பீடு  சரிந்ததற்கு  அக்டோபர்  2-இல்  எரிபொருள்  உதவித்தொகை  குறைக்கப்பட்டது  காரணமாக  இருக்கலாம்  என  நினைக்கிறோம்”, என்று  அம்மையம்  தெரிவித்தது.