தொல்லைகளை எதிர்நோக்கும் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுவது ஏன்?

dcmAllianze University College of Medical Sciences (ஏயுசிஎம்எஸ்)  நிதிப்பற்றாக்குறை  உள்பட  பல  பிரச்னைகளை  எதிர்நோக்கினாலும்  அது  தொடர்ந்து  செயல்பட  உரிமம்  வழங்கப்பட்டிருப்பது  எப்படி  எனக்  கல்வி  அமைச்சு  விளக்க  வேண்டும்.

இவ்வாறு  கேட்டுக்கொண்ட  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமி,  அப்பல்கலைக்கழகம்  எதிர்நோக்கும்  குறைகளுக்கு  அதன்  நிறுவனர்  சைனுடின்  வாஸிர்  உடனடியாக  தீர்வு  காண  வேண்டும்  என்றார். ஏப்ரல்  தொடங்கி    பல  குறைகள்  தெரிவிக்கப்பட்டு  வருவதாகவும்  அவற்றுக்கு  இதுவரை  தீர்வு  காணப்படவில்லை  என்றும்  அவர்  சொன்னார்.

இவ்விவகாரம்  பினாங்கில்  நடந்தாலும்,  கல்வி  கூட்டரசு  அரசாங்கத்தின்  அதிகாரத்துக்கு  உள்பட்டது என்பதால் மாநில  அரசால்  எதுவும்  செய்ய  இயலாதிருக்கிறது.

“எங்களால்  பிரச்னையை  வெளிச்சம்போட்டுக்  காட்டத்தான்  முடியும். அமைச்சுதான் இதற்கு  விரைவாக  தீர்வு  காண  வேண்டும்”, என்றாரவர்.

கப்பலா பத்தாசில்  உள்ள  அப்பல்கலைக்கழகக்  கல்லூரியால்  அதன்  பணியாளர்களுக்குச்  சம்பளம் கொடுக்க  இயலவில்லை. நிதி  நெருக்கடி  காரணமாக  அக்கல்விக்கழகம்  இழுத்து  மூடப்பட்டதால்  சுமார்  476  மாணவர்கள் நிலை திண்டாட்டமானது.

476 பேரில்  208 பேருக்கு  மற்ற  பல்கலைக்கழகங்கள்  இடம்  வழங்க  முன்வந்தன.  ஆனால்,  பின்னர்  அங்கும் இடமில்லை  என்று  கைவிரித்து  விட்டார்கள்..