ஷாபி: குதப்புணர்ச்சியில் சைபுல் விருப்பமில்லாத பங்கேற்பாளர்

Anwar 4th dayஅன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீட்டு விசாரணை இன்று நான்காவது நாளாக பெடரல் உச்சநீதிமன்றத்தில் காலை மணி 9.16 க்கு தொடங்கியது.

நேற்று அன்வாரின் தற்காப்பு குழு அதன் வாதத்தை முடித்துக் கொண்டததைத் தொடர்ந்து இன்று அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா அவரது வாதத்தை முன்வைக்கத் தொடங்கினார்.

புத்ராஜெயாவில் நீதிமன்றத்திற்கு வெளியில் நிலைமை அமைதியாக காணப்பட்டது. சுமார் 100 அன்வார் ஆதரவாளர்கள் அங்கு இருந்தனர்.

அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவர் ஸ்ரீராம் கோபால், வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் கீ குவோங், பாஸ் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் கமாருடின் ஜாப்பார், பிகேஆர் முன்னாள் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுதியான், சிலாங்கூர் முன்னாள் மந்திரிபுசார் முகமட் முகமட் தாயிப் மற்றும் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் அங்கிருந்தனர்.

அரசு தரப்பு வாதத்தைத் தொடங்கிய முகமட் ஷாபி, அன்வார் தரப்பின் வாதம் முழுவதுமே எதிரணித் தலைவரான அன்வாரை சிக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதிதான் அரசாங்கம் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு என்றார்.

அன்வாரின் கூற்றுப்படி இந்த அரசியல் சதியில் மிக உயர்மட்ட நிலையில் பிரதமரிலிருந்து சாதாரண புலன்விசாரணை அதிகாரி வரையில், முன்னாள் பிரதமர் மகாதீரும் கூட, சம்பந்தப்பட்டுள்ளனர் என்றார் ஷாபி.

இச்சதியில் புகார்தாரர் சைபுல் புஹாரி அஸ்லான், சட்டத்துறை தலைவர் அப்துல் கணி பட்டெய்ல் மற்றும் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது அன்வாரின் குற்றச்சாட்டு என்றார் ஹாபி.

அன்வாரின் தற்காப்புக் குழு கேடுக்கொண்ட ஆவணங்கள் மறுக்கப்பட்டதையும் இச்சதியின் ஓர் அங்கம் என்றும் அதில் அரசு தரப்பு வழக்குரைஞருக்கும் பங்கு உண்டு என்று புகார் செய்துள்ளதையும் ஷாபி சுட்டிக் காட்டினார்.

அம்னோவையும் முக்கிய ஊடங்களையும் அன்வார் இச்சதியில் சேர்த்துக் கொண்டுள்ளார் என்றார் ஷாபி.

மேலும், அன்வார் விசாரணை நீதிபதியையும் தாக்கியுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறிய ஷாபி, “இருந்தும் விசாரணை நீதிபதி பொறுமை காத்தார்”, என்றார்.

குற்றவாளிக் கூண்டிலிருந்து சாட்சியமளித்த அன்வார் நீதிபதி அவரது தீர்ப்பை முன்னதாகவே முடிவு செய்து விட்டார் என்று வீண் சந்தடியை ஏற்படுத்தினார் என்றார் ஷாபி.

இந்த விசாரணையின் போது 60 தடவைகளில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஷாபி, பல ஆவணங்களுக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை உண்மையில் இங்கும் காமன்வெல்த் நாடுகளின் சட்டங்களிலும் இல்லாதவை என்றார்.

அன்வார் நீதித்துறையையும் தாக்கியுள்ளார். அதில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அப்துல் மாலிக் இஷாக்கும் அடங்குவார் என்று ஷாபி கூறினார்.

“அவர் (அன்வார்) நஜிப், ரோஸ்மா, ரோட்வான் மற்றும் ஐஜிபி மூசாவும் கூட சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்”, என்றார் ஷாபி.

அன்வார் தமக்கு சாட்சிகளின் அறிக்கைகள் மறுக்கப்படுவது வேறுபாடு காட்டுவதாகும் என்று அவர் குற்றம் சாட்டியது பற்றி குறிப்பிட்ட ஷாபி, ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் அவ்வாறான ஆவணங்கள் தற்காப்பு தரப்பு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டதே இல்லை என்பது தமது அனுபவம் என்றார்.

விந்து மாதிரி குறித்த தற்காப்பு தரப்பின் வாதத்தை மறுத்த ஷாபி, “சைபுல்லின் அந்தரங்க இடங்களில் ‘ஆண் Y’ மரபணு காணப்பட்டது. உண்மையில், அதே ‘ஆண் Y’ தான் கேஎல் ஐபிகே சிறைக்கூடத்திலும் காணப்பட்டது என்று ஷாபி வாதிட்டார்.

அன்வாரை தற்காப்பு வாதம் செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை அன்வார் குறைகூறியள்ளதையும் ஷாபி சுட்டிக் காட்டினார்.

அன்வாரால் குறைகூறப்பட்ட அதே நீதிபதிதான் அவரை குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தார் என்றும் ஷாபி கூறினார்.

தேசா டாமன்சாரா கொண்டோவில் அன்வார் மற்றும் சைபுல்லுக்கு இடையிலான குதப்புணர்ச்சி பிற்பகல் மணி 3.00 லிருந்து 4.30 க்குள் Anwar 4th day1நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தாம் கட்டாயமின்றி மனமுவந்து செய்யவில்லை என்று சைபுல் கூறும் போது, அது ஒப்புதலிருந்து வேறுபட்டது என்று ஷாபி வாதிட்டார்.

“அது தெளிவாக்கப்படதாக ஒன்றாகும். அதில் எனது மனம் வேண்டாம் என்கிறது, ஆனால் எனது எஜமனர் முழு ஆதிக்கம் கொண்டிருக்கையில் நான் என்ன செய்வது? அதற்கும் ஒப்புதலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது”, என்றார் ஷாபி.

சைபுல் ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு சாட்சி. அவர் குற்றச் செயலுக்குத் துணை இருப்பவர் அல்ல என்று சைபுல்லை ஷாபி வர்ணித்தார்.

Anwar 4th day2அன்வாரின் உதவியாளர் என்ற முறையில் சைபுல்லின் கடமைகளை விவரித்த ஷாபி, சைபுல் சிங்கப்பூர், ஹோங் காங் போன்ற இடங்களுக்கெல்லாம் அன்வாருடன் சென்றுள்ளார். அவருக்கு அலவன்சும் கொடுக்கப்பட்டது.

“அன்வார் பிரையோனி (Brioni) ஆடைகளை சைபுல்லுக்கு தந்துள்ளார். அது போன்றது என்னிடம் இல்லை. ஏன் அன்வார் இவ்வாறான உறவை (சைபுல்லுடன்) வைத்திருக்க வேண்டும்”, என்று ஷாபி வினவினார்.

தேசா டாமன்சாரா கொண்டோவில் என்ன நடந்தது என்ற விபரங்களையும் ஷாபி முன்வைத்தார்.