சரவாக் வெட்டுமரத் தொழிலால் விளைந்த விபரீதங்களை விவரிக்கிறது நூல்

bookஇன்று  கோலாலும்பூரில்  வெளியீடு  காணும் ‘Money Logging’ என்ற  நூல்   சரவாக்கில்  வெட்டுமரத்  தொழிலால்  விளைந்த  விபரீதங்களை  வெளிச்சம்   போட்டுக்  காண்பிக்கிறது.

சுவிட்சர்லாந்தில்  தளத்தைக்கொண்ட  புருனோ மன்சர்  நிதியின்  செயல்முறை இயக்குனர்  லூகாஸ்  ஸ்ராவ்மன்  எழுதிய  அந்நூல்லுக்கு  முன்னுரை  தீட்டியுள்ள  மூத்தாங்  உருட்,  வெட்டுமரத்  தொழிலின்  கோரப்பசிக்கு  இரையானவை  காடுகள்  மட்டுமல்ல,  அதற்கு  மேலே என்கிறார்.

“எம்  மக்கள்  அவர்களின் சூழலமைப்பை  இழந்தார்கள்,  பாரம்பரிய  வாழ்க்கைமுறையை  இழந்தார்கள், தூய்மையான  குடிநீரை  இழந்தார்கள், காடுகளில்  சுதந்திரமாக  சுற்றித்திரியும்  உரிமையை  இழந்தார்கள். இத்தனை  இழப்புக்குப்  பின்னர்  ஏதாவது  ஆதாயம்  கிடைத்திருக்க  வேண்டுமே. அதுதான்  இல்லை.

“சரவாக்கில்  பலர்  நான் பிறந்தபோது  எப்படி  இருந்தார்களோ  இன்னமும்  அப்படித்தான்   ஏழைகளாக  இருக்கிறார்கள்.

“ஆனாலும், யுஎஸ்$50 பில்லியனுக்கும்மேல்  பெறுமதியுள்ள  மரங்கள்  வெட்டப்பட்டிருப்பதாக   மதிப்பிடப்படுகிறது”, என்றவர்  கூறினார்.

வெட்டுமர  ஆதாயங்கள்  ஊழலுக்குத்  தீனி  போடவும்  சிலரை  ஆட்சியில்  வைத்திருக்கவும் குற்றச்செயல்கள்  புரியவும்  உதவியுள்ளன  என  முத்தாங்  தம்  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.