மகாதிர்: நான் பிரதமர் ஆக மாட்டேன்; நஜிப்புக்கு கவலை வேண்டாம்

drmடாக்டர்  மகாதிர்  முகம்மட்,  தாம்  மீண்டும்  நாட்டை  வழிநடத்த  வந்துவிடலாம்  என்று   பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  கவலைப்பட வேண்டியதேயில்லை  என்கிறார்.

இன்று  காலை  புத்ரா  ஜெயாவில், பன்னாட்டு  இஸ்லாமிய  கருத்தரங்கு  ஒன்றில்  அவர்  இவ்வாறு  கூறினார்.

அதில்  பார்வையாளராகக்  கலந்துகொண்டிருந்த  வணிகர் ஒருவர்,  மகாதிர்  மட்டும்  ஆட்சியில்  இருந்தால்  மலேசியா  ஒரு  முன்னணி  இஸ்லாமிய  நாடாக விளங்கும்  என்று  கூறி,  அவர்  நாட்டை  வழிநடத்தும் நிலை  இருந்தால்  முஸ்லிம்களின்  முன்னேற்றத்துக்கு  என்ன  செய்திருப்பார்  என்று  கேள்வியைத்  தொடுத்தார்.

அதற்குப்  பதிலளித்த  மகாதிர், “நான்  அடுத்த  பிரதமராக  மாட்டேன்”, என்று  சொல்லி  அத்துடன்  நிறுத்தாமல், “அதனால், பிரதமருக்கு (நஜிப்  கவலை  வேண்டாம்”, என்றும்  சேர்த்துக்  கூறினார்.

நஜிப்பைத்  தொடர்ந்து  குறை  சொல்லிவரும் மகாதிர்  அவ்வாறு  சொன்னதைக்  கேட்டுக்  கூட்டத்தினர்  வாய்விட்டுச்  சிரித்தனர்.