முருகன் படம் ஒட்டப்பட்ட கனிமநீர் போத்தல்கள் அகற்றப்படும்

Hindu deity on bottlesபத்துமலை கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் கனிமநீர் போத்தலில் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் இந்து தெய்வம் முருகன் படம் பதிக்கப்பட்டிருக்கும் கனிமநீர் போத்தல்கள் நிலையடுக்கிலிருந்து அகற்றப்படும் என்று அந்நீர் தயாரிப்பு நிறுவனம் சுவான் சின் செண்ட். பெர்ஹாட் கூறுகிறது.

மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) போட்ட கூப்பாட்டை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கோயிலின் முன் அமைந்திருக்கும் பெரிய முருகன் சிலையின் படத்தை அந்த கனிமநீர் போத்தலில் ஒட்டியதில் தீய நோக்கம் எதுவும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.

அந்த லேபிள் “Visit Malaysia Year 2014” வுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தைக் கொண்டது அந்நிறுவனம் மேலும் கூறியது.