தமிழனக்கு தலைமைத்துவம் இல்லையா? அறியாமை அபச்சாரம் ! -பொன். ரங்கன்

contentwriting_1தமிழின அரசியல் தலைவர்களுக்கு தலைமைத்துவம் இல்லை என்று சொன்னால் சரி. காரணம் தமிழ் மாநாடிற்கும் தமிழர் மாநாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் போனதால் ,பினாங்கு சர்வதேச மாநாட்டை ஒரு உதாரண அலசலாக  வளம் வரலாம்.

“தமிழ்” மாநாடு என்று உணர்ந்த அன்வார் திருக்குறளை வாழ்வியலில் இலக்கியத்தை மையப்படுத்தி ஒரு மலாய்க்காரர் தன்னிலை புரிந்து மாநாட்டை முடித்து வைத்தார். அவர் முழு உரைக்கு போகவேண்டாம் அது நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போராட்டம்.

ஆனால் மற்றவர்களின் உரைகள் தமிழர் சார்ந்த பழைய கதை. தமிழ் மாநாட்டில்  ”தமிழர்களின் அடையாளங்கள்” என்பது கருப்பொருள்.தமிழ் மொழி சார்ந்த இலக்கிய இலக்கண புதுமை அல்லது மின்னியல் கணினி சார்ந்த இன்றைய அபிவிருத்தி அடையாளங்களை யாரும் பேசவில்லை, வைக்கோ கூட கசங்கிககிடக்கும் பழைய கிழிந்த லுங்க்கிக்குக் ஒத்தடம் வைத்தாரே அன்றி அதை தைக்க வில்லை ! ராமசாமியின் கருப்பொருள் அர்த்தங்கள், அர்த்தனங்கள் புரியாத அரசியல் உலப்பல்கள் மாறிவரும் உலகில்  தமிழ் மங்கிய அம்மாவாசியாகத்தான்  போனது.

அரசியல் ஆளுமையில் கொள்கை இல்லாத தலைமைத்துவம் இனத்துக்கு அடையாளமில்லை.தற்காலிக அரசியல் பதவியில் பந்தா ? அதுதான் இன்றைய நிலைமை.

ஆனால் அதையும் தாண்டி இனத்தை தூக்கி நிறுத்தும் பொருளாதார சக்தியில் தலைமைத்துவம் நன்றாகவே உள்ளது. அவரின் பெராராய்ச்சிக்கு விட்டு விடுகிறேன். எனினும் தமிழனிடம் தலைமைத்துவம் இல்லை என்று இனியும் ஒப்பாரிக்க வேண்டாம், என்பதற்கு சில வடிவங்களை காட்ட கடமை பட்டுள்ளேன். தவறுகள் திருத்தப்படவில்லை என்றால் அதுவும் தலைமைத்துவ கோளாறுகள்தான் ?

கடந்த 7 ஆண்டுகளாக தமிழனுக்கு தலைமைத்துவம் இல்லை என்பவர் திருத்திநீரா ?.ஞானலிங்கம்  செத்துப்போன மைக்காவை வாங்கி 80% கொடுத்தாரே ! மீதத்தை தோனியிடம் வித்தாரே! தோனி அதை பங்கு சந்தைக்கு கொண்டுபோய் இன்று பல கோடி கணக்கில் சொத்தா ஆக்கினாரே தலைமைத்துவம் இல்லையா?

மேக்சிசிஸ் ஆனந்தா , AK நாதன், இன்னும் எத்தனையோ வணிகர்கள் இன்று (7% இந்தியர்களில் ) 5% தமிழர்களின் 1.5 %சொத்தையாவது வைத்துள்ளனரே ! எதிர்க்கட்சி அரசியல் ஆளுமை என்ன சாதித்தது?
பூஜியத்து அரசியல் தலைமைத்துவம் மருவி மருவி என்ன பயன்? பென்சனுக்கு மாரடிக்கும் பதவிகளால் இந்த சமுதாயம் தோற்றுக்கொண்டே தான் உள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள அரசியல் தலைமைத்துவம் உள்ளது அது கயமையின் மிச்சங்கள்.

இன்பதமிழ் இலக்கிய் விழாவுக்கு போயிருந்தேன். ஒரு சின்ன குழுவினர்தான். தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் முத்தான மூன்று தலைப்புகள் 1. குமரி முதல் கோலாலம்பூர்வரை ( தமிழ் இனம் சார்ந்த பகிர்வு)  2, தமிழர் வாழ்வில் இலக்கியம்( மொழி சார்ந்த வியாக்கியம்)
3. மாறாத உலகில் மாறி வரும் தமிழ் ( புதிய தலைமைத்துவ வாழ்வியல் போராட்டம்)  இதயத்துக்கு ஒரு சபாஷ்!

தமிழ் பத்திரிகை ஊட உலகம் அங்கில்லை ! காரணம் பத்திரிக்கை விற்க இது ஒரு பெரிய அரசியல் தலைவனின் நிகழ்வல்ல! ஏமாற்று ஊடக தர்மம் .விலைபோகும் தலைமைத்துவம். என்றும் பார்க்கும் இன மான மொழி உறவுகள் ஒரு நூறு பேர். சின்ன தலைமைதான் ஆனால் விசியங்களை தாங்கிய 4 மணி நேர தமிழ் மொழியியல் மாண்புகளை பார்க்க முடிந்தது. அரசியல் தலைவர்கள் இல்லை. ஆரா வார பொய்கள் இல்லை.பிரமைகள், பேய்கள் இல்லை.  உலகத தலைவர்கள் இல்லை ஆனால் மொழி பெருமை தீப்பிழம்பாய் சுட்டது.

அங்கே தமிழ் ஊடகங்கள் காசுக்கு மாரடிக்க.. ஆந்திரா அரசியல் தனத்தில் தமிழ் மாநாடு அந்த திராவிடனை அழைத்து தமிழும் தமிழ் இனமும் மீண்டும் மீளாத  துயரில் தலைமைத்துவம் மண்டி இடுகிறது.

தமிழர்களுக்கு தலைமைத்துவம் வேண்டாம். தமிழர், தமிழ் மொழி முதலீட்டில் அரசியல் தடாகத்தில் ஏற்றி வைத்துள்ள தமிழ் தலைவர்களுக்கு ஒரு நல்ல “தமிழா” தலைமைத்துவம் அவசியமாகிறது?

உலகத் தமிழ்ததலைவர்கள் ஒரு “தமிழ்த்தலைவனை” அடையாளம் கண்டபிறகே புதிய தமிழன் அடையாளம் என்ன, ஏது  என்று நம் தலையில் எழுத முடியும்!

உலகத் தமிழர் பாதுக்காப்பு மாநாடு செயலகம் திட்டமிட்ட தமிழர் பாதுகாப்பு செயலக தீர்மானம் இன்று உங்கள் இயக்க சொத்தாக மாறி உள்ளது .மகிழ்ச்சிதான். மோரிசிசில் நடந்த மாநாடு தொடர் பினாங்கில் ஒரு அடையாமில்லாமல் ஆக்கிரமித்த தலைமைத்துவம் சவுத் ஆபிரிக்கா வரை போவதும் மகிழ்ச்சிதான்.

12 கோடி உலகத தமிழக்கு உலக அரசியல் அங்கிகாரம் இல்லை ! நரேந்திர மோடிக்கு விண்ணப்பம் செய்து இருக்கலாம். அல்லது புதிதாய் நிரந்திரமில்லாத அந்தஸ்து பெற்ற மலேசியா அரசுக்கு தீர்மானம் தந்து இருககலாம்.  எதிர்கட்சி தலைவர் அன்வரிடம் மோரி இட்டு இருக்கலாம். இதுவல்லவோ தலைமைத்துவம்.!

முக்கியமாக  தமிழ் ஈழம் ,தமிழர் நாடு என்ற மண்ணுரிமை மனித உரிமைகளை ஐநா சபையில் 2015 இல் பொது சபையில்  பேசுவது யார் ? எந்த தலைமைத்துவம் ? நாடு கடந்த தமிழ் ஈழ நாடுகளின் பிரத நிதிகளும் அங்கு இல்லை. தமிழ் தேசியம் பேசும் உங்கள் தேர்வில் வைகோவும் இல்லை.  பாரத நாடு யாரை அனுப்ப வேண்டும் என்ற தெளிவும்  இல்லை.  என்னய்யா எண்ணெய் தலைமைத்துவம் அதற்கு “அடையாளங்களை தேடி” யார் தலையில் அரசியல் வெண்ணை?

இந்த அடையாளத்தை கொஞ்சம் படியுங்கள்….இதை ஏன் வைக்கோல் பேச வில்லை?…கேட்டு சொல்லுங்கள்…!

சேர சோழ பாண்டிய பேரரசுகளின் எல்லைப்புறங்களை வடுகர்கள் அலைக்கழித்து வடுக அரசு தோற்றுவித்து தமிழ் அரசுகளிடையில் குழப்பங்களை மூடியதில் தமிழகமே நிலைக்குலைந்து போனதாம் தமிழ் மூவேந்தர்கள் ஆட்சி அழிப்பு வடுகர்கள் அது சார்பு பிராமிநியர்கள் சங்கதம் என்ற செயற்கை மொழியை தமிழில் குழைத்து வடுக பிராமணர்கள அகரகாரங்களை  தமிழகத்தில் உருவாக்கினர்.கிரந்தம் தமிழுக்குள் புகுந்து வடுக பிராமணர்கள் தமிழ் தமிழன் வரலாற்றையே தலைகீழாகினர். இதை ஏன் வைக்கோ சொல்லவில்லை.தெலுங்கு வடுகரும் ,பிராமிணரும்,  வட பிரவேசிகள் சங்கத மொழி தெய்வ மொழி என்று தமிழர்களை ஏமாற்றினார்.இது தமிழர்களிடம் வான் உச்சிகே போனாதாம்.

ஐயா ! தன்னை அறியான் தாமரையை அறிவானா ?
முன்னைக்கு பெருமை முகமறியான் ! என்னை
விளக்கி இடித்துரை வீசினும் பாரான் !
அளகிலர்ச் சோம்பர் அவர்க்கு !

இப்படி தமிழர்களின் காலக்கணிப்பு பல அடையாளங்களை தந்துள்ளது. பழைய அடையாளங்கள் அதன் துரோகம் தலைமைத்துவ கோளாறா ? இல்லை இன அழிப்பு ,மொழி அழிப்பு ,மனிதம் உரிமை ஒழிப்பு. புதிய அடையாளம் தேவை இல்லை. புதிய தலைவன் தேவை. மாறி வரும் உலகில் மாற்று  தலைவன் வேண்டும். அவரை திருக்குறள் வழி தேடுவோம். யாராச்சும் நல்ல திருக்குறளை முன் மொழியுங்கள். தமிழ் வளர்ப்போம் தமிழனை மீட்போம். மீண்டும் வருவேன், நன்றி.

பொன். ரங்கன்