ரயிஸ்: நஜிப்போல் ஜோடிக்கப்பட்ட படம் சமுதாயத்துக்கு எதிரான ஒரு குற்றமாகும்

raisபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் ஒரு  இந்து  குருக்கள்போல்  காட்சியளிக்கும்  படத்தைப்  பதிவிட்டவர்களை  முன்னாள்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திம்  கண்டித்தார்.

அச்செயல்,  “சமுதாயத்தின்  சிந்தனை  நோயுற்றிருப்பதைப்  பிரதிபலிக்கிறது”  என்றார்.

இதற்கெதிராக  பள்ளிகளிலும்  இதர  கல்விக் கழகங்களிலும்  அறநெறிகள்  கற்றுத்தரப்பட  வேண்டும்  என  முன்னாள்  தகவல், தொடர்பு  அமைச்சருமான  அவர்  கூறினார்.

அறநெறிச்  சார்ந்த  செயல்களையே  எல்லாச்  சமயங்களும்  வலியுறுத்துவதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.

ரயிஸ், இப்போது யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா (யுஐஏ)  தலைவராகவும்  சமூக-கலாச்சார  விவகாரங்களில்  அரசாங்கத்துக்கு ஆலோசகராகவும்  உள்ளார்