சரவாக்கில் மின்கட்டணம் குறைகிறது

satemசரவாக்கில்,  2015-இல்  வீடுகளுக்கான  மின்சாரக்  கட்டணம்  குறையும்  என  முதலமைச்சர்  அடினான்  சாதேம் கூறினார்.

இதனால்  குறைந்த  வருமானம்  பெறுவோர்  அதிக  நன்மை  அடைவர் என்றாரவர்.

ஏற்கனவே  அம்மாநிலத்தில்  70,000  பேர்   கூட்டரசு  அரசாங்கத்திடமிருந்து  மின்கட்டண உதவித்  தொகையாக  ரிம20 பெற்று  வருகிறார்கள்.  புதிய  திட்டம்  அமலுக்கு  வரும்போது  மேலும்  60 ஆயிரம்  பேர்  அவர்களுடன்  சேர்ந்து கொள்வர்.

அதாவது  சுமார்  130,000 பேர்  சரவாக்கில்  மின் கட்டணம்  செலுத்த  வேண்டியிருக்காது  என  அடினான்  கூறினார்.

“அதே  வேளை  அரசாங்க  உதவித் தொகையைப் பெறாமலும்  மாதம்  150 யுனிட்டைப்  பயன்படுத்துவோருமான  வாடிக்கையாளர்களின்  மின்கட்டணம் 40விழுக்காடுக்குமேல்  குறையும்”, என்றாரவர்.

150-இலிருந்து 200  யுனிட்வரை   பயன்படுத்தும்  80,000 வாடிக்கையாளர்களின்  மின்கட்டணம்  30 விழுக்காடு  குறையும்.