இப்ராகிமுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை வழக்குரைஞர் மன்றத்துக்குக் கொடுங்கள்

gooiபெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  வழக்கு  தொடுக்கும் அதிகாரத்தைச்  சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல்  கனி  பட்டேய்ல்   வழக்குரைஞர்  மன்றத்துக்கு அளிக்க  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வழக்கை  நடத்த  எஜி “தயக்கம் காட்டுவது”போல்  தெரிவதாக  பிகேஆர்  எம்பி  கூய்  ஹிசியாவ்  லியோங்  கூறினார்.

“பொதுநலனைக்  கருத்திக்கொண்டு  இப்ராகிம்மீது  வழக்கு  தொடுக்கும்  அதிகாரத்தை  அவர் வழக்குரைஞர்  மன்றத்துக்குக்  கொடுக்க  வேண்டுமெனக்  கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர்  ஓர்  அறிக்கையில் கூறினார்.

ஒரு  குற்றவியல்  விவகாரத்தில்  தனியார்  வழக்குரைஞரை  அரசுத்தரப்பில்  வாதாட  நியமிப்பது  புதிதல்ல. அன்வார்  இப்ராகிம்  வழக்கில்  ஷாபி  அப்துல்லா தலைமை  அரசு  வழகுரைஞராக  நியமிக்கப்பட்டு  ஒரு  முன்மாதிரி  ஏற்படுத்தப்பட்டிருப்பதை கூய்  சுட்டிக்காட்டினார்.