வழக்குரைஞர் மன்றம் அரசுக்காக வழக்கு தொடுக்கும் அமைப்பல்ல

barவழக்குரைஞர்  மன்றம்,  அது  அரசு  சார்பாக  குற்றவியல்  வழக்குகளை  நடத்தும்  அமைப்பல்ல  என்பதைத்  தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த  அமைப்பு   பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  குற்றவழக்கு  தொடுக்கும்  அதிகாரத்தை  சட்டத்துறை தலைவர்(ஏஜி)  அப்துல்  கனி  பட்டேய்லிடம்  கேட்டுப்பெற  வேண்டும்  என  பிகேஆர்  எம்பி  கூய்  ஹிசியாவ்  லியாங்  கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது  வழக்குரைஞர்   மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்  இவ்வாறு  கூறினார்.

ஏஜி  அப்படிப்பட்ட  அதிகாரத்தை  வழங்குவதாக  இருந்தால்  தனிப்பட்ட  வழக்குரைஞர்களுக்கு  மட்டுமே வழங்க  முடியும்  என்று லியோங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.