அம்னோ பேராளர்கள் உணர்ச்சிவயப்பட வைக்கும் விவகாரங்களை விலக்கி வைக்க வேண்டும்

adnanஅம்னோ  ஆண்டுப்  பேரவையில்  கலந்துகொள்ளும்  பேராளர்கள்  இனம், சமயம்  தொடர்பிலான  எளிதில்  உணர்ச்சிவசப்படவைக்கும்  விவகாரங்களைப்  பெரிதுபடுத்திப்  பேசாதிருப்பது நல்லது  எனத்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  அறிவுறுத்தியுள்ளார்.

உறுப்பினர்களின்  தனிப்பட்ட  பிரச்னைகளையெல்லாம்  பேரவைக்குக்  கொண்டுவரக்  கூடாது.

“தனிப்பட்ட  விவகாரங்கள்,  எளிதில்  உணர்ச்சிவசப்பட  வைக்கும்  இன  விவகாரங்கள், அம்னோ  உறுப்பினர்களுக்கிடையில்  ஆத்திரத்தை  உண்டுபண்ணக்கூடிய  பிரச்னைகள் பற்றியெல்லாம்  பேச  வேண்டாம்.

“இவ்விவகாரங்களுக்குப்  பொறுப்பான  உதவித்  தலைவர்  ஹிஷாமுடின்  உசேன்   வழிகாட்டிகளை வழங்கியுள்ளார். அவற்றை  அவர்கள்  பின்பற்றலாம்”,  என  தெங்கு  அட்னான்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

அம்னோவின்  65-வது  ஆண்டுக்  கூட்டம்  நவம்பர்  25  தொடங்கி  நவ.29வரை  நடைபெறுகிறது.