சுல்தான் கடிந்துகொண்டிருப்பதை வைத்து தம்மைக் குற்றம் சொல்வது தவறு என்கிறார் பழனிவேல்

palaniமஇகா  தலைவர்  ஜி.பழனிவேல் தம்  நாடாளுமன்றத்  தொகுதியில் ஏற்படும்  வெள்ளப் பெருக்குப்  பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத்  தாம்  எதுவும்  செய்யவில்லை  என்று  கூறப்படுவதை  மறுக்கிறார்.

நேற்று பகாங்  ஆட்சியாளர்  சுல்தான்  அஹ்மட்  ஷா  சுமத்திய  குற்றச்சாட்டுகளுக்கு  எதிர்வினையாக  அவர் இவ்வாறு  கூறினார்.

“அவர் என்ன  செய்தார்?  ஒன்றுமே  இல்லை……இதுபோன்ற  பேரிடர்  ஏற்படும்போது  மக்கள்தான்  துன்பப்படுகிறார்கள்.

“கடந்த  பொதுத்  தேர்தலில்  மக்கள்  அவருக்கு  வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். இதுதான்  அவர்  அவர்களுக்குச்  செய்யும்  கைம்மாறா?”,என்று  சுல்தான் நேற்று  கடிந்து   கொண்டார்.

அதற்குப் பதிலுரையாக  பழனிவேல்  அவ்விவகாரம்  ஆழமாக  ஆராயப்பட  வேண்டியது  என்றும்  யாரையும்  குற்றம்  சொல்வதில்   பயனில்லை  என்றும்  சொன்னார்.

“நான்  எம்பியாக  தேர்ந்தெடுக்கப்படும்  முன்னரே  பல  விசயங்கள்  நடந்திருக்கின்றன.

“ஆனாலும், கேமரன்  மலைக்கு  ஏற்பட்டுள்ள  பேரழிவைத்  தடுத்து  அதற்கு  மறுவாழ்வளிக்க  முடியும்”, என்றார்.

சுல்தானுடன்  தமக்கு  நல்லுறவு  உண்டு  என  பழனிவேல்  கூறினார்.

“நல்லது  கெட்டது  எல்லாவற்றையும்  அவரிடம்  எடுத்துரைப்பேன். சுல்தான்  மாநிலத்தின்மீதும்  மக்களின்மீதும்  உன்மையிலேயே  அக்கறை  உள்ளவர். அவர்களின்  நலன்  பற்றியே  எப்போதும்  நினைத்துக் கொண்டிருப்பார்”, என்றாரவர்.