கேமரன் மலை வெள்ளத்துக்கு அட்னான், பழனிவேல் இருவருமே பொறுப்பு

teresaகேமரன்  மலை வெள்ளப் பெருக்குக்கும்  நிலச்  சரிவுக்கும், கேமரன்   மலை  எம்பி  ஜி.பழனிவேல், பகாங்  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  ஆகிய  இருவருமே  பொறுப்பாவர்  என்கிறார்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்.

மாநில  அரசு  தேவையான  சட்ட  அமலாக்கத்தைச்  செய்யத்  தவறியதை  அட்னானே  ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, பழனிவேல்  மட்டுமே  இதற்குப் பொறுப்பல்ல.

“அட்னான் (சட்டவிரோத  காடழிப்புக்கு எதிராக)  சட்டங்களைச்  செயல்படுத்துவதில்  கடுமை  காட்டினால்  மாநில  அரசு  குறைகூறப்படும்  எனக் கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

“பழனிவேல்  நில  ஆக்கிரமிப்பு  நெடுங்காலமாகவே  இருந்து  வந்துள்ளது  என்றும்  அதன்மீது கண்  வைத்திருந்தாலும்  அதன்  மூலம்  தெரியவில்லை  என்றும்  கூறியுள்ளார்.

“ஆக,  கேமரன்  மலையைப்  பாதுகாக்க  உகந்த  நடவடிக்கைகளை   விரைந்து  எடுக்காத  பழனிவேல்,  அட்னான்  ஆகிய  இருவருமே  இதற்குப்  பொறுப்பு”, என  தெரேசா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.