காலிட் உதவியாளர்களுக்கு ரிம2.6 மில்லியன் கொடுக்கப்பட்டதில் அதிகாரமீறல் நிகழ்ந்துள்ளது

azmin சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலி,  தமக்கு  முன்னவரான அப்துல் காலிட்  இப்ராகிம்  அவரின்  உதவியாளர்களுக்கு  ரிம2.6 மில்லியன்   :ஊக்கத்  தொகை  கொடுத்த  விவகாரத்தில்  அதிகாரம்  தவறாக  பயன்படுத்தப்பட்டிருப்பதை  ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காலிட் பதவிக்காலத்தின்  இறுதிநாளில்  மந்திரி  புசார்  இன்கோர்பரேடட் (எம்பிஐ) வாரிய  உறுப்பினர்களுமான  அந்த  எண்மருக்கும்  அப்பணத்தைக் கொடுத்தது  ஒரு  மோசடிச்  செயல்தான் என்றாரவர்.

“கொடுத்த  பணத்தொகையை  மட்டுமல்ல  கொடுத்த  வழிமுறைகளப்  பார்த்தால்கூட  அதிகாரம்  தவறாகப்  பயன்படுத்தப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாக  தெரிகிறது.

“இது  கேள்விக்குரிய  செயல்தான்”,  என்று  அஸ்மின்  கூறியதாக  மலாய் நாளேடான  சினார்  ஹராபான்  மேற்கோள்  காட்டியுள்ளது.

அதை  விசாரணை  செய்யுமாறு  டிசம்பர்  முதல்  நாளில்  பொறுப்பேற்கும்  புதிய  எம்பிஐ  நிர்வாகத்தைக்  கேட்டுக்கொள்ளப்போவதாகவும்  அவர்  தெரிவித்தார்.