மாணவியின் மரணத்துக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமில்லை

hospஊழியர்களின் கவனக்குறைவால்தான்  ஜி.தினாஷா  இறந்தார்  என்று  கூறப்படுவதை  அசுந்தா  மருத்துவமனை  மறுத்துள்ளது.

அந்த 14-வயது மாணவிக்குச் சிகிச்சை  அளிக்கப்பட்டதில்  மருத்துவமனை  நடைமுறைகள்  சரியாகவே  பின்பற்றப்பட்டன என  அம்மருத்துவமனையில்  தலைமை  செயல்  அதிகாரி பீட்டர்  டிஎல் லியோங்  கூறினார்.

“தொடக்கநிலை விசாரணைகள்  அக்கொள்கை  பின்பற்றப்பட்டிருப்பதைக்  காண்பிக்கின்றன”, என்றாரவர்.

தினாஷாவின்  பெற்றோர்,  இன்று  காலை  செய்தியாளர் கூட்டமொன்றில்  தவறான  மருந்து  கொடுக்கப்பட்டதால் தங்கள் மகள்  இறந்து   போயிருக்கலாம்  என்றனர்.

அது  பற்றிப்  போலீசிலும்  புகார்  செய்துள்ளனர்.