பெட்ரோலுக்குப் புதிய விலை நிர்ணய முறை

ronரோன் 95-க்கான  விலை  இனி, managed float system  என்ற  முறையின்  அடிப்படையில்  சந்தை  நிலவரத்துக்கு  ஏற்ப  முடிவு  செய்யப்படும். இதன்படி  அனைத்துலகச்  சந்தையில் 10-நாள்  எண்ணெய் விலைகளிலிருந்து   ஒரு  சராசரி  கணக்கிடப்பட்டு  கூடவே  சுத்திகரிப்பு  ஆலைகள், சில்லறை வணீகர்கள்  ஆகியோரின்  ஆதாயமும்  நிர்ணயிக்கப்பட்டு  எண்ணெய்க்கான  விலை முடிவு  செய்யப்படும்.

இப்புதிய  முறையில், மாதந்தோறும்  எண்ணெய்  விலை  மதிப்பிடப்படும்.  உதவித்  தொகை  இருக்காது.

உள்ளூர்  வர்த்தக, கூட்டுறவு,  பயனீட்டாளர் விவகார  அமைச்சர்  ஹசன்  மாலெக்கால்   நேற்று  அறிவிக்கப்பட்ட  இப்புதிய  விலை  நிர்ணய  முறை  டிசம்பர்  முதல்  தேதியிலிருந்து  அமலுக்கு வரும்.