அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய சமய ஊடுருவல்: அதனால் அவை தவிர்க்கப்படுகின்றன

zairilமலாய்க்காரர்- அல்லாத  பெற்றோர்  தங்கள்  பிள்ளைகளை   அரசாங்கப்  பள்ளிகளுக்கு  அனுப்ப  விரும்புவதில்லை. அப்பள்ளிகள் சமய  நோக்கத்துடன்  செயல்படுவதும்  இஸ்லாமிய  சமயம்  படிப்படியே  ஊடுருவி  வருவதும்தான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  டிஏபி  எம்பி  சைரில்  கீர்  ஜொஹாரி.

முன்பு  அரசாங்கப்  பள்ளிகளில்  70  விழுக்காடு  மலாய்க்கார  மாணவர்களும்  30 விழுக்காடு  மலாய்க்காரர்-அல்லாத  மாணவர்களும்  பயின்றனர். இப்போது  பின்சொல்லப்பட்டவர்  எண்ணிக்கை  2-இலிருந்து  3விழுக்காடாகக் குறைந்து  விட்டது.

“1960-களிலும்  70-களிலும்  பெற்றோர்  பிள்ளைகளை  அரசாங்கப்  பள்ளிகளுக்கு அனுப்புவதையே விரும்பினர்.  ஏனென்றால், கல்வி  தரமாக  இருந்தது. இன்று, தரம்  குறைந்து விட்டதைத்தான் தேர்வு முடிவுகளும் மதிப்பீடுகளும்    காண்பிக்கின்றன.

“பிள்ளைகளுக்குச்  சிறந்த  கல்வி  கிடைக்க  வேண்டும்  என்பதே  பெற்றோரின் விருப்பம். அது  எந்த மொழியில்  கிடைத்தாலும்  பிரச்னை  இல்லை”, என்றவர்  சொன்னார்.

நேற்று  பினாங்கில்  பிரிட்டிஷ்  தூதரகம்  ஏற்பாடு  செய்திருந்த  ஒரு  நிகழ்வில்  சைரில் இவ்வாறு  கூறினார்.