அகதிகள் நடத்தப்படும் முறைமீது அவசரத் தீர்மானம்

refugeeடிஏபி  எம்பிகள்  இருவர்,  மலேசியாவில்  உள்ள  அகதிகளின்  நிலையை  வெளிச்சம்போட்டுக்  காண்பிக்கும்  அல்-ஜசீராவின்  ஆவணப்  படம்  பற்றி  விவாதிக்க  அனுமதி  கோரும்  அவசரத்  தீர்மானம்  ஒன்றை இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்தனர்.

நான்கு நாள்களுக்குமுன்  ‘மலேசியாவின்  வேண்டப்படாதவர்கள்’ என்ற தலைப்பில் ஒளியேறிய அவ்வாணவப்  படம்  தொடர்பில்  அரசாங்கம்  இதுவரை  எதிர்வினை  ஆற்றவில்லை  என்று  கூறிய செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்-கும்  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்கும்  அத்தீர்மானத்தை  அனுமதிக்க  வேண்டுமென  அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா-வைக்  கேட்டுக்கொண்டனர்.

அத்தீர்மானம்  இன்று  காலை  தாக்கல்  செய்யப்பட்டது.

ஆவணப்பட விவகாரத்தைச்  சரியாகக்  கையாளாவிட்டால்  ஆசியான்  நாடுகளுக்குத்  தலைமையேற்கும்  மலேசியாவின்  ஆற்றல்  பாதிக்கப்புறலாம்  என்று  அத்தீர்மானம்  கூறியது.