சிலாங்கூரின் ரிம2.4பில்லியன் பட்ஜெட்

budget2015-க்கான  சிலாங்கூரின்  பட்ஜெட்டை  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  இன்று  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.. பக்கத்தான்  இதுவரை  கொண்டுவந்த  வரவு-செலவுத்  திட்டங்களிலேயே  மிகப்  பெரியது  இதுதான்.  ஆனால்,  இது  ஒரு  பற்றாக்குறை  பட்ஜெட்டாக  அமைந்துள்ளது.

2015-க்கான  செலவுகள்  ரிம2.42 பில்லியனாக  இருக்கும்  எனவும்  வருமானம்  ரிம1.97 பில்லியனாகவும் இருக்கும்  என  அது  மதிப்பிடுகிறது.

இதனுடன் ஒப்பிடும்போது  இதற்கு  முந்திய  காலிட் இப்ராகிம் காலத்து  பட்ஜெட்  சிறியதுதான். அந்த பட்ஜெட்டின்  ஒதுக்கீடு  ரிம1.8பில்லியன் மட்டுமே.